பிரபல நடிகர் கொச்சின் ஹனீஃபா மரணம்!
சென்னை, பிப்.2, 2010
தமிழ், மலையாள திரைப்பட உலகின் பிரபல குணச்சித்திர நடிகர் கொச்சின் ஹனீஃபா இன்று (செவ்வாய்க்கிழமை) மரணமடைந்தார். அவருக்கு வயது 59.
கல்லிரல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் அவரது உயிர்
பிரிந்தது.
கொச்சின் ஹனீஃபாவின் இயற்பெயர்
சலீம் அகமது கோஷ். 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்த இவர்,
தாவரவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். 'கொச்சின் கலாபவன்' என்ற அமைப்போடு
தன்னை இணைத்துக் கொண்டதால், பிற்காலத்தில் கொச்சின் ஹனீஃபா என்று
அழைக்கப்பட்டார்.
1970களில் மலையாள
திரைப்பட உலகில் கால்பதித்த துவக்க காலத்தில் சிறு சிறு
கதாப்பாத்திரங்களில் வலம் வந்தவர். பின்னர், வில்லன் கதாப்பாத்திரங்களில்
நடித்து, அதன் பின் தன்னை ஓர் அற்புதமாக நகைச்சுவை நடிகராக மலையாளத்தில்
முத்திரைப் பதித்துக் கொண்டார்.
கொச்சின்
ஹனீஃபா சிறு வேடத்தில் நடித்து முதலில் வெளிவந்த படம், 'அஷ்டவக்ரம்' என்ற
மலையாள திரைப்படம். 1979ல் வெளிவந்த அந்தப் படத்தில் தனது நடிப்பாற்றலால்
அனைவரின் கவனைத்தையும் வெகுவாக ஈர்த்தவர். 1993ல் வெளிவந்த வல்த்சல்யம்
என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
மலையாளம்,
தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில்
பணிபுரிந்தவர், ஹனீஃபா. இவர் திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குனராகவும் கூட
மிகச் சிறந்த முறையில் சினிமாவுக்கு பங்காற்றியவர்.
தமிழில்
சுமார் 75க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கொச்சின் ஹனீஃபா,
கமல்ஹாசனின் 'மகாநதி' படத்தின் மூலம் வெகுவாக தமிழ் ரசிகர்களிடையே
அறியப்பட்டவர்.
முதல்வன், லேசா லேசா, காதலா
காதலா, பட்டியல், சிவாஜி என பல தமிழ்ப் படங்களிலும் தனது நகைச்சுவை
ததும்பும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக வசீகரித்த கொச்சின் ஹனீஃபா
அண்மையில் நடித்த படம் வேட்டைக்காரன்.
கொச்சின் ஹனீஃபாவின் மறைவுக்கு தமிழ், மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Read more »